பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து அரசு பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்!
மீட்பு பணிகள் குறித்து குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.
பட்டாசு வெடிப்பது, மீட்பு பணி குறித்து அரசு பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, பேரிடர் மேலாண்மை மீட்பு பணி குறித்து குமாரபாளையம் அரசு பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் நேரத்தில், எதிர்பாராமல் தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் சிக்கிய நபரை மீட்பது குறித்தும், தீ விபத்து நடந்த இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது,பேரிடர் மேலாண்மை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் தாலுக்கா அலுவலகத்தில் செயல்முறை விளக்கமளித்தனர். தீயணைப்பு துறை அலுவலர் ஜெயச்சந்திரன் பேசியதாவது:
பட்டாசுகள் வெடிக்கும் பொழுது எவ்வளவு தூரமாக இருந்து நாம் பட்டாசுகளுக்கு நெருப்பு வைக்க வேண்டும், வெடி போன்ற பட்டாசுகள் வைக்கும் போது அவற்றின் திரிகளை கிள்ளிவிட்டு வைக்க வேண்டும், மத்தாப்பு வைக்கும் பொழுது பாதுகாப்பாக வைக்க வேண்டும், பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அணியும் ஆடைகள் பெரும்பாலும் பருத்தி துணிகளாக இருந்தால் எளிதில் தீ பிடிக்காது, அவ்வாறு பிடித்தாலும் உடனடியாக அணைத்து விடலாம், பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்து பட்டாசை வெடிக்கும் பொழுது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுடன் ஆடைகளும் ஒட்டிக்கொண்டு காயங்களை பெரிது படுத்தி விடும். ஆகவே பாலியஸ்டர் ஆடைகள் தவிர்க்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள், கிணறு ஆகிய நீர் நிலைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை, தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய நபரை செயல்முறை விளக்கமளித்தபடி எளிய வழிகளின் மூலம் காப்பாற்றலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu