குமாரபாளையம் வாரச்சந்தையில் தீ விபத்து: தீயணைப்புத்துறையினரை நேரில் அழைத்த அவலம்
தீ விபத்து ஏற்பட்ட குமாரபாளையம் வாரச்சந்தை.
குமாரபாளையம் வாரச்சந்தை வளாகத்தில் கொட்டிவைக்கபட்டுள்ள குப்பை குவியலில் இருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. வளாகத்தின் நுழைவுப்பகுதி இருபுறமும் மெயின் கேட் பூட்டப்பட்டிருந்தது. உரியவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கேட் திறக்கப்பட்டது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். பொதுமக்கள் சிலர் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தபோது, போன் லைன் கிடைக்கவில்லை என்பதால் நேரில் சென்று தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் சிலர் குப்பை குவியலில் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தீ விபத்து நடந்த சில சம்பவங்களில் தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தபோது போன் லைன் கிடைப்பதில்லை. ஆட்கள் குறைவு என்பதால், வேறு இடத்திற்கு தீயை அணைக்க செல்லும்போது போன் ரிசீவரை கீழே எடுத்து வைத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
உயிர்கள் மற்றும் உடைமைகள் காக்கும் பொறுப்பில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலக போன் லைன் கிடைக்காமல் தீ விபத்து பாதிப்பு அதிகமாகி, சேதமதிப்பு அதிகரிக்கவும், பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் தீயணைப்பு அலுவலக போன் எப்போதும் பயன்பாட்டில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu