தனியார் நூற்பாலையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

தனியார் நூற்பாலையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

 நூற்பாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்.

பள்ளிபாளையம் அருகே மின் கசிவு காரணமாக தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே யோகராஜ் மற்றும் சசி ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து 7வருடங்களாக நூற்பாலை நடத்தி வருகின்றனர்.

நூற்பாலையில் இன்று விடுமுறை காரணமாக பணியாளர்கள் யாரும் வரவில்லை. இந்நிலையில் காலை நூற்பாலையில் இருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் நூற்பாலையில் இருந்த இயந்திரம் மற்றும் கோண் மூட்டைகள் என ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்