ஆயத்த ஆடை தயாரிப்பு கடையில் தீ விபத்து!
படவிளக்கம் : குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் தீ விபத்து
குமாரபாளையத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மாலை 04:40 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சர்ட்,பேண்ட் பேக்கிங் செய்து கொண்டிருக்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் நேரில் வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. சேத மதிப்பு சுமார் 20 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தீயணைப்பு படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. மாநில அளவில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலுடன், தீயணைப்பு வீரர் போல் உருவ பொம்மை அருகே வைக்கப்பட்டிருந்தது. நிலைய அலுவலர் மற்றும் மற்ற தீயணைப்பு படையினர் மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதன் ஒரு கட்டமாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று பள்ளிபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியை நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் பேரணியில் சென்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிலைய அலுவலர் (பொ)தண்டபாணி பேசியதாவது:
தீயணைப்பு பணி ஆபத்து நிறைந்தது என்றாலும், சவாலுடன் எதிர்கொண்டு நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம். தீயணைக்கும் பணியின் போது இறந்தவர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதற்கு மேலும் நீடிக்க கூடாது என்பது என் விருப்பம். பொதுமக்களுக்கு சேவை செய்வோம். எச்சரிக்கையுடன் பணியாற்றுவோம்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. பலமுறை கேட்டும் இதுவரை மின்விளக்கு வசதி செய்து தரவில்லை. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீயணைப்பு படையினரும் பலமுறை வந்து பாம்பு பிடித்து செல்கின்றனர். இதன் தொடர்ச்சியாக அங்கு வசிக்கும் சரண்யா, 35, என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டதும் சரண்யா பயந்து கத்தினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து விபரம் அறிந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பாம்பை பிடித்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டோம். பொதுமக்கள் அச்சத்தை போக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் உடனே இப்பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. நேரில் வந்த இவர்கள் டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் அப்பகுதியில் இரவிலும் தேடி வந்தோம். இதனை நாங்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டோம்.
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 35, என்பவரது மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பாறைகளின் நடுவே விழுந்து எழுந்திருக்க முடியாமல் சிக்கிக்கொண்டது. இதன் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, சம்பவத்திற்கு வந்து பாறை இடுக்கில் சிக்கிய மாட்டினை பொக்லின் உதவியுடன் மீட்டோம். மாட்டினை உயிருடன் மீட்ட மீட்பு படையினரை அப்பகுதியினர் பாராட்டினர்.
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான நூல் ஆலை உள்ளது. இதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தோம்.
இது போல் பல சம்பவங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu