குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
X
குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதை மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில்  பார்வையிட்டார்.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பழுதான தண்ணீர் குழாய்சரி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 300க்கும் மேலான உள் நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் வசதி மிகவும் அத்தியாவசியமானது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தண்ணீர் குழாய் பழுதான நிலையில் இருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் கொடுக்க வந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகர தி.மு.க. செயலாளர் செல்வம் ஆகியோரிடம் இது தொடர்பாக டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக ஒரே நாளில் பழுதான குழாய் சரி செய்யப்பட்டு, தண்ணீர் விநியோகம் சீரானது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். நோயாளிகளும் தற்போது தண்ணீர் பிரச்சினை இன்றி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!