குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவக்கம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவக்கம்
X

குமாரபாளையம் புத்தர் தெரு தொடக்கப்பள்ளி சார்பில், புத்தர் தெரு பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் புத்தர் தெரு தொடக்கப் பள்ளி சார்பில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன.

குமாரபாளையம் புத்தர் தெரு தொடக்கப் பள்ளி சார்பில், புத்தர் தெரு பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதன் துவக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன், தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணாக்கர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதில் பி.டி.ஏ. நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!