குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடந்தது.

காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கட்டளைதாரர்களின் திருவீதி உலா நடந்து வருகிறது. விழாவின் ஒரு கட்டமாக ஊஞ்சல் விழா நேற்று மாலை கோவிலில் நடந்தது. மகளிர் குழுவினர் பங்கேற்று பக்தி பாடல்கள் பாடி ஊஞ்சல் ஆட்டி விட்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விமான அலகு குத்தியபடி வந்தனர்.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற குண்டம் இறங்குதல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் என பல வழிகளில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். அழகு குத்துதலில் நாக்கில் அலகு குத்துதல், பக்கவாட்டில் அழகு குத்துதல், நீளமான அலகை கன்னங்களில் குத்துதல், மற்றும் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்கியபடி வரும் விமான அலகு என பல வகைகளில் வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள். நேற்று ஏராளமான பேர் விமான அலகு குத்தியபடி, கிரேன் உதவியுடன் தொங்கியபடி வந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆட்டம் ஆடியவாறு பக்தர்கள் ஆடி வர, விமான அலகு குத்தியபடி பக்தர்கள் வந்ததை. சாலையின் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பக்தர்களை விரைவில் செல்ல அறிவுறுத்தி, போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!