மகன் கண்ணெதிரே தந்தை விஷம் குடித்து தற்கொலை

மகன் கண்ணெதிரே தந்தை விஷம் குடித்து தற்கொலை
X
குமாரபாளையத்தில் மகன் கண்ணெதிரே தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

நாமக்கவ் மாவட்டம், குமாரபாளையத்தில் மகன் கண்ணெதிரே தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியில் வசிப்பவர் பொன்னுசாமி( 44.), இவரது மகன் மதியரசன் ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். அந்த கடையின் முன்பு குடிப்பழக்கம் உள்ள அவரது தந்தை பொன்னுசாமி வந்து, தான் விஷம் குடித்து விட்டேன் என கூறி மயங்கி விழுந்துள்ளார். இவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 06:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!