குமாரபாளையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர்கேரி பகுதியில் நடந்த மோதல்கள், விவசாயிகள் பலியான சம்பவத்தை கண்டித்து, குமாரபாளையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் தனேந்திரன், சண்முகம், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu