குமாரபாளையம் அருகே விவசாயிகள் சங்க கிளை மாநாடு

குமாரபாளையம் அருகே விவசாயிகள் சங்க கிளை மாநாடு
X

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் விவசாயிகள் சங்க கிளை மாநாடு மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே விவசாயிகள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் விவசாயிகள் சங்க கிளை மாநாடு மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக மகேஸ்வரி, செயலராக மயில்சாமி, பொருளராக கார்த்திகேயன், உதவி தலைவராக மீனா, உதவி செயலராக சித்ரா உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். நடைபெறக்கூடிய ஒன்றிய மாநாட்டிலும், 14ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் விடும் முன்பு தூர் வாரப்படவேண்டும், செத்தான் அடைந்துள்ள கன்னி வாய்க்கால்கள் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்திட வேண்டும், வேளாண் விலை நிலங்களில் பிளாட் அமைக்க ஊராட்சி நிர்வாகம் அனுமதி தரக்கூடாது, தட்டான்குட்டை வேளாங்காடு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஏரி அல்லது பெரிய குளம் அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai and business intelligence