விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
X

மத்திய அரசை கண்டித்து குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசை கண்டித்து குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசை கண்டித்து குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் தனேந்திரன், தலைமையில் நடந்தது. இதில் மத்திய அரசு, வேளாண் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விவசாய சங்க மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள் பேசினார்.,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் விவசாய சங்க தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆபாசமாக சித்தரித்தவரை போக்சோவில் கைது செய்ய போராட்டம்

குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரித்த முருகேசன் என்பவரை போச்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்திட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி. மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்து உள்ளது.

இந்நிலையில் முருகேசன் என்பவர் மீது போடப்பட்டுள்ள வழக்கானது மிகவும் சாதாரண வழக்காக உள்ளது. மேலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிவிடும் நிலையில் உள்ளது. மேலும் இவ்வளவு பெரிய குற்ற பின்னணிகளுக்கு பின்னால் ஒரு கும்பல் செயல்பட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. எனவே வி. மேட்டூர் பகுதியில் உள்ள பெண்களும் பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ள முருகேசன் என்பவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த வழக்கை முழுமையாக தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லங்காட்டுவலசில் தனேந்திரன் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன், வி மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகன், பழனிச்சாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!