தொடர் மழையால் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

தொடர் மழையால் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
X

தொடர் மழையால் குமாரபாளையம் பகுதியில் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

தொடர் மழையால் குமாரபாளையம் பகுதியில் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

தொடர் மழையால் குமாரபாளையம் பகுதியில் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

கடும் கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராத நிலை உள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சில நாட்களாக மழை வந்ததால், குறுகிய கால பயிரினங்கள் பயிர் செய்திட வேண்டி, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழும் பணியை துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

வாய்க்கால் பாசனத்தை நம்பி வாழ்ந்து வந்த குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள், வாய்க்காலில் தண்ணீர் வராததால் கடும் அவதிக்கு ஆளாகினர். தற்போது மழை வந்து கொண்டிருப்பதால், குறுகிய கால பயிர் வகைகள் பயிர் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story