வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள் கோரிக்கை

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள்  கோரிக்கை
X

கோப்புப்படம்

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர் செய்ய முடியும்.

தற்போது கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கால்நடைகளுக்கு தீவனப்பயிர் கூட பயிரிடமுடியாத நிலை ஏற்படும்.

எனவே, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயிகள் எள்ளு, உளுந்து ஆகிய பயிர் வகைகளை பயிரிட ஏதுவாக இருக்கும். பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். ஆகவே 10 அல்லது 15 நாட்களுக்கு முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி