நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட போலி வக்கீல்

நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட போலி வக்கீல்
X

கைது செய்யப்பட்ட மாரிமுத்து.

குமாரபாளையத்தில் கைது செய்யப்பட்ட போலி வக்கீல் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

குமாரபாளையம் அருகே சானார்பாளையம், உழவன் நகரில் வசிப்பவர் மாரிமுத்து, 43. குமாரபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் கிரிமினல் வழக்கு சம்பந்தமாக ஆஜராகி, தன் கட்சிக்காரருக்காக வாதாடினார். எதிர் தரப்பு வக்கீல் பாஸ்கரன் சந்தேகம் கொண்டு, நீதிபதி சப்னாவிடம் சொல்ல, நீதிபதி தீர விசாரணை செய்ததில் மாரிமுத்து வக்கீல் இல்லை என்பது உறுதியானது.

இது குறித்து குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், இவருக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. உடல் ஊனமுற்றவர் என்பதால், இவருடன் உதவிக்கு ஒருவர் தேவை என்றனர். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின் தற்போது நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!