குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
X

குமாரபாளையத்தில் மைக் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குமாரபாளையம் கரையோர பகுதி மக்களுக்கு தாசில்தார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, காவிரி கரையோரப்பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், பழைய பாலம் அருகில் அண்ணா நகர், கலைமகள் வீதி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் மைக் மூலம் எச்சரிக்கை செய்தார்.

இந்த பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்க புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, கலைமகள் வீதி நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil