குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்தி, 29. காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளி. கை ஊனமான மாற்றுத்திறனாளி. நேற்று காலை 06:00 மணியளவில் மார்க்கெட் வருவதற்காக வந்து கொண்டிருந்தார்.

அப்போது வழியில் சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட டிஸ்கவர் டூவீலரில் வந்த நபர் கார்த்தி முன் நின்று, ஆள் காட்டி விரலை நீட்டி, பணத்தை எடு..என தகாத வார்த்தை பேசி மிரட்டியதுடன், சட்டை பையில் இருந்த பணம் 450:00 ரூபாயை பிடுங்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிடிக்க வந்தபோது கையை காட்டி மிரட்டி கொன்று விடுவேன் எனக்கூறி அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து கார்த்தியின் நண்பர்கள் ஜீவா, மோகன்ராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக சாட்சி சொல்ல, கார்த்தி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பணத்தை பறித்து சென்ற, பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 30, என்பவரை, காவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future