குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு  கூட்டம்
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மகளிரணி செயலர் சித்ரா பேசினார்.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களுக்கும், பிரச்சாரத்தில் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வார்டுகளிலும் கட்சியின் துவக்க நாள் விழாவையொட்டி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், தலைமைக் கழகம் அறிவித்த பணிகளுக்குரிய புதிய நிர்வாகிகள் நியமித்தல், கட்சி தலைவர் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புக்கேற்ற செயல்பாடுகளை செயல்படுத்துதல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பொருளர் நந்தகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலர்கள் சிவகுமார், செங்கோட்டுவேலு, மல்லசமுத்திரம் ஒன்றிய செயலர் ராசு, மகளிர் அணி செயலர் சித்ரா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!