குமாரபாளையத்தில் தினமும் இரவில் தவறாமல் ஆஜராகும் மழையால் மக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் தினமும் இரவில் தவறாமல்   ஆஜராகும் மழையால் மக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளமென ஓடியது.

குமாரபாளையத்தில் தினமும் இரவில் மழை ஆஜராகி விடுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தில் தினமும் இரவில் பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. தீபாவளி சமயம் என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நவராத்திரி விழா அனைத்து கோவில்களில் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிரமப்பட்டனர். சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இரவில் மழை பெய்தது.

குமாரபாளையத்தில் மழையின் தாக்கத்தால் நாள் முழுதும் மேகமூட்டம் நீடித்தது. குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததுடன், நேற்று மாலை வரையில் மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் தாக்கத்தால், மேகமூட்டம் இருந்ததால், குளிர்ச்சி சீதோஷ்ண நிலை நீடித்தது. குமாரபாளையத்தில் பெரும்பாலான விசைத்தறி பட்டறைகள் சிமெண்ட் அட்டை போடப்பட்டதாக உள்ளது. கடும் வெயிலால், இதில் பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், வெப்பத்தில் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றி வந்தனர். நேற்று வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சி நிலவியதால் விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினார்கள்.

குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வந்தார்கள். இந்நிலையில் நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால், கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு, குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது.

Tags

Next Story