ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி இணையதள பாதுகாப்பு குறித்த நிகழ்வு

ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி இணையதள பாதுகாப்பு குறித்த நிகழ்வு
X
ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி இணையதள பாதுகாப்பு குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தலைப்பு : கணிப்பொறி இணையதள பாதுகாப்பு

நிகழ்வு நடைபெற்ற நாள் : நவம்பர் 30 ஆம் தேதி


நிகழ்வு நடைபெற்ற நேரம் : காலை 10 மணி

நிகழ்வு நடைபெற்ற இடம் : IT ஆய்வகம், ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், நவம்பர் 30 ஆம் தேதி அன்று கணிப்பொறி இணையதள பாதுகாப்பு குறித்த நிகழ்வு (Computer security Day) நடைபெற்றது.

நவம்பர் 30 ஆம் தேதி அன்று, செல்வி K. கனிஷ்கா இரண்டாம் ஆண்டு IT ல் பயிலும் மாணவி வரவேற்புரையாற்றினார். திரு. T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் அவர்கள் தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் திரு. மோகனராம், திரு ராகுல் குமார் (web designers- JKKN Educational Institutions )அவர்கள் கலந்து கொண்டனர். IT ஆய்வகத்தில் இந்நிகழ்வானது நடைபெற்றது.


JKKNCET ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட கணிப்பொறி பாதுகாப்பு நிகழ்வில் தரவுகளை உருவாக்கி அதனை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது மற்றும் திறம்பட நிர்வகிப்பது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

சைபர் பாதுகாப்பு, Ethical Hacking பற்றி விவரிக்கப்பட்டது. மற்றும் தரவுகளை எவ்வாறு virus இடம் இருந்து பாதுகாப்பது, எவ்வாறு cyber crime இடம் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.IT துறையில் சைபர் செக்யூரிட்டி இன் பங்களிப்பு & இனிவரும் காலங்களில் இதன் இன்றியமையா பயன்பாடு குறித்து விவரிக்கப்பட்டது.


நன்றியுரை : நிகழ்வின் இறுதியாக செல்வி. P.லத்திகா , இரண்டாம் ஆண்டு IT ல் பயிலும் மாணவி நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!