பள்ளிபாளையம்: அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ஈரோடு சிறகுகள் அமைப்பு

பள்ளிபாளையம்: அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்  வழங்கிய ஈரோடு சிறகுகள் அமைப்பு
X

ஈரோடு  சிறகுகள் அமைப்பினர்,குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி ஆகியோர் இணைந்து உபகரணங்கள் வழங்கினர்.

பள்ளிபாளையத்தில், ஈரோடு சிறகுகள் அமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு சிறகுகள் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும், கொரோனா நோயாளிகளுக்கான மாஸ்க், கைக்குட்டை, சோப்பு, ஷாம்ப், பிஸ்கட், குடிநீர் ஜக் ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் இணைந்து மருத்துவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகரச்செயலாளர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் சேர்மன் செந்தில், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் டி.கே.எஸ். ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தனசேகரன், பேரூர் கழக அவைத்தலைவர் வெடியரசம்பாளையம் தங்கராஜ், மருத்துவர்கள் வீரமணி, பாரதி மற்றும் கண்ணையன், ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!