குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நேசமுடன் உற்சாக வரவேற்பு அளித்த வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி மற்றும் ஆசிரியர்கள்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 600 நாட்களுக்கு பின்பு பள்ளிகள் திறக்கவும், மாணவர்களை உற்சாகமாக வரவேற்கவும் தமிழக அரசு உத்திரவிட்டது. அ

தன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் முன்பு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டும், வழிநெடுக விரிப்புகள் விரிக்கப்பட்டும், பள்ளி வளாகம் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி, பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகிக்க முதலாம் வகுப்பு பயில வரும் மாணவ, மாணவியர்க்கு மாலைகள் மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டு நேசமுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வரவேற்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவி, வெங்கடாசலம், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்