சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பிய இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு

சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பிய இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு
X

சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு சக போலீசார் வரவேற்பு அளித்தனர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பியதும், சக போலீசார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பியதும், சக போலீசார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கேரளா எ.டி.எம். கொள்ளை நபர்களை பிடிக்கும் சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, பரமத்தி எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்கை முடிந்து அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர். நேற்று குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு சக போலீசார் உற்சாக வரவேற்பளித்தனர். ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். நகரின் பொதுமக்கள் பலரும் நேரில் சந்தித்து, இன்ஸ்பெக்டர் சாதனைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

அப்போது இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையி்ல் இந்த சம்பவத்தில் இறைவன் அருளால், எல்லோரின் அன்பால், உடன் பணியாற்றிய போலீசாரால், காவல்துறை எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் உயிர் பிழைத்து வந்துள்ளேன். எல்லோரின் அன்பும், ஆதரவும் இருந்தால் காவல் துறையில் மேலும் சாதிப்பேன் என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!