நேபாளத்தில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

நேபாளத்தில் தங்கப்பதக்கம் வென்ற 5 சாதனையாளர்களுக்கு குமாரபாளையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

குமாரபாளையத்திலிருந்து யோகா மல்யுத்தம் சர்வதேச போட்டிக்கு இந்தியா சார்பில் குமாரபாளையத்திலிருந்து பயிற்சியாளர் இளங்கோவன் தலைமையில் நேபாளத்திற்கு சென்றனர். அங்கு நடந்த போட்டிகளில் யோகாவில் கவின்ராஜ், முகேஷ், தீபிகா மற்றும் மல்யுத்தத்தில் ஜெயாகார்த்திக்குமார், அசோக்பாரதி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தனர். வெற்றிக்கோப்பையுடன் குமாரபாளையம் வருகை தந்த வீரர்களுக்கு பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சரவணன், சித்ரா, ரேவதி மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பட்டாசு வெடித்தும், சந்தன மாலைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare