குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் துவக்கம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில   பேச்சு பயிற்சி முகாம் துவக்கம்
X

குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சு பயிற்சி முகாமினை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். 

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சு பயிற்சி முகாமை முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சு பயிற்சி முகாம் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது

இன்றைய பல அரசு தேர்வுகளை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் பல நிறுவனங்களில் பணியில் சேர்ந்திடவும் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில வழி கல்வி, ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சு பயிற்சியும் கூட அவசியமாகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இந்த போனோடிக்ஸ் எனும் பயிற்சி 15 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

விடியல் ஆரம்பம் தலைவர் பிரகாஷ், பேச்சு பயிற்சியாளர் சண்முகம், ஆசிரியர்கள் சுரேஷ், கலைச்செல்வி, சரவணன், சோபனா, மேஷி, நிர்வாகிகள் மணிகிருஷ்ணா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself