கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள்  இருவர் நீதிமன்றத்தில் சரண்
X

ராஜதுரை, தர்மதுரை

கடலூர் அருகே பொறியாளரை செய்ததாக சகோதரர்கள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட பொறியாளர் உதயராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என்றும், இதில் 7 பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட தர்மதுரை, 21, ராஜதுரை, 23, இருவரும் நேற்று மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் நீதி மன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சப்னா முன்னிலையில் சரணடைந்தனர்.

மாஜிஸ்ட்ரேட் உத்திரவின்படி இவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீசார் சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!