ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து எளிதாக்க பொதுமக்கள் வேண்டுகோள்..!

ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து எளிதாக்க பொதுமக்கள் வேண்டுகோள்..!
X

குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து எளிதாக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து எளிதாக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து எளிதாக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சந்தையை மேம்படுத்தக்கோரி பல அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடியதன் பலனாக, தற்போது, கான்கிரீட் தளம், சிமெண்ட் மேடை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதனால் அருகில் உள்ள உழவர் சந்தையில் தற்காலிகமாக வாரச்சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வாரச்சந்தை உழவர் சந்தைக்கு மாற்றப்பட்டதும், பழைய வாரச்சந்தை நுழைவுப்பகுதி முதல் காவேரி நகர் பாலம் பிரிவு சாலை வரை, இடைப்பாடி சாலையில் இருபுறமும், 200க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், பல்வேறு ஊர்களிலிருந்து பணியாட்களை ஏற்றிச்செல்லும் தனியார் நிறுவன வாகனங்கள், பவானி, இடைப்பாடி, தேவூர் செல்லும் பேருந்துகள், எண்ணற்ற வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருவதால்,வாகன ஓட்டிகள், சந்தை வியாபாரிகள், சாலை ஓரத்தில் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால், விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடன் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் மிகவும் அவஸ்தையை ஏற்படுத்துவதாக உள்ளது.

விபத்து அச்சத்தை போக்கவும், சாலை விரிவாக்கம் செய்து, போக்குவரத்தை எளிதாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!