குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்: போலீசார் குவிப்பு

குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்:  போலீசார் குவிப்பு
X

அம்மன் நகர் பகுதியில் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில், ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டன.

குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பலர் ஆக்கிரமித்து வீடுகள் அமைத்து இருந்தனர். இதனை அகற்ற, பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் போராடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற சென்றால், உயர்நீதிமன்றம் தடை ஆணை காட்டி பலரும் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில், குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில், 2 பொக்லின் மூலம், ஆக்கரமிப்பு பகுதிகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனையொட்டி, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். தாசில்தார் தமிழரசி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ஆகியோர், இப்பணிகளை பார்வையிட்டனர்.


இதுகுறித்து, கமிஷனர் ஸ்டான்லிபாபு, இன்ஸ்டாநியூஸ் இணையதளத்திடம் கூறுகையில், அம்மன் நகர் பகுதி ஆக்கிரமிப்பு, பல ஆண்டுகளில் பல வழக்குகள் நடத்தப்பட்டு, 80 சதவீத ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டன. தற்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பெரும்பாலான ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளும் ஆக்கிரமிப்பு பகுதிகள் என தெரிய வந்துள்ளது. உயர்நீதி மன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.வி.ஏ.ஒ. முருகன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்