டூவீலர் கன்சல்டிங் கடை மற்றும் துணிக்கடையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

டூவீலர் கன்சல்டிங் கடை மற்றும் துணிக்கடையினர் ஆக்கிரமிப்புகளை  அகற்ற கோரிக்கை
X

குமாரபாளையத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் டூவீலர் கன்சல்டிங் கடை மற்றும் துணிக்கடை.

குமாரபாளையத்தில் டூவீலர் கன்சல்டிங் கடையினர் மற்றும் துணிக்கடையினர் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குமாரபாளையத்தில் டூவீலர் கன்சல்டிங் கடையினர் மற்றும் துணிக்கடையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு புறவழிச்சாலையிலிருந்து குமாரபாளையம் நகரத்திற்கு செல்லும், நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான சாலையில், சில மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைத்து பாதசாரிகள் நடக்க, இருபுறமும் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டது. பேவர் பிளாக் நடைபாதையில் ராஜம் தியேட்டரில் இருந்து ஆனங்கூர் பிரிவு வரை, சாலையோரம் டூவீலர் கடை நடத்துபவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, டூவீலர்களை பாதசாரிகள் நடக்கும் இடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் டூவீலர்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் இருந்து பள்ளிபாளையம் பிரிவு சாலை வரை உள்ள பாதசாரிகள் நடக்கும் இடத்தில், துணிக்கடைகள் அமைத்து, நடந்து செல்பவர்களுக்கும், டூவீலர்களில் செல்வோர்க்கும் மிகுந்த இடையூறு ஏற்படுத்துகின்றனர். மாலை நேரங்களில், வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள நேரத்திலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து, டூவீலர்களை நிறுத்தி வைக்கும் ஆட்டோ கன்சல்டிங் கடைக்காரர்கள் மற்றும் துணி கடைக்காரர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடந்து செல்பவர்களுக்கும், டூவீலர்களில் செல்வோர்களுக்கும் ஏற்படும் சிரமங்களை போக்குவதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture