என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர் குமாரபாளையம் கார் திருட்டு வழக்கின் குற்றவாளி

என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்  குமாரபாளையம் கார்  திருட்டு வழக்கின் குற்றவாளி
X

குமாரபாளையம் காவல்நிலையம்(பைல் படம்)

திருநெல்வேலியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரௌடி குமாரபாளையம் கார் திருட்டு வழக்கில் கைதானவர் என போலீஸ் தரப்பில் தகவல்

குமாரபாளையம் கார் திருட்டு வழக்கின் குற்றவாளியான ரௌடி திருநெல்வேலியில் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து கார், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெசின் ஆகியவற்றை 2019ம் ஆண்டு நீராவி முருகன்( 42 )என்பவர் திருடிய வழக்கில், குமாரபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது ஜாமீனில் உள்ளது தெரியவந்துள்ளது, இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளநிலையில், திருநெல்வேலி ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரௌடி நீராவி முருகன் பலியானார்.

Tags

Next Story
ai marketing future