/* */

குமாரபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு
X

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரையில் வடிகால் மற்றும் நடைமேடை அமைக்கும் பணி 14 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வருட காலமாக நடைபெற்றது. நடைமேடை, வடிகால் ஆகியவற்றின் மீது பலர் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு கடைகளை அமைத்துள்ளதால், இவைகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததின் மூலம், நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் உதவி பொறியாளர் சையத்ராசிம் தலைமையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணிகளை துவக்கினர். இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சிவகுமார், மோகன் உள்ளிட்ட போலீசார் சமரச பேச்சுவார்த்தை செய்தும் பலனில்லை.

பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் கூறியதாவது:- நடைமேடையில்தான் மின் கம்பங்களும் உள்ளன. அவைகளையும் அகற்ற வேண்டும். நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக எழுதி தருகிறோம். இதனை கலெக்டரிடம் காண்பித்து முடிவு செய்யுங்கள். இவ்வாறு கூறினர்.

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவிப்பதாக எழுதி கொடுத்ததும், ராஜம் தியேட்டர் பகுதியில் இருந்து குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு பணிகள் துவக்கினர். ஸ்டாண்ட் போர்டுகள், மற்றும் இதர ஆக்கிரமிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமாரபாளையம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் இயற்கை பிரியன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களும் இதில் பங்கேற்றனர்.

Updated On: 13 April 2022 2:13 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி