குமாரபாளையத்தில் லாரி மோதி மின் கம்பம் சேதம்: ஓட்டுநர் கைது

குமாரபாளையத்தில் லாரி மோதி மின் கம்பம் சேதம்: ஓட்டுநர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் லாரி மோதி மின் கம்பத்தை சேதப்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்தரனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையம் அருகே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின் கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.

இதனால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், அக்கம் பக்கம் உள்ள கடையினர் அதிர்ச்சியடைந்தனர். பலமாக மோதியதில் மின் கம்பம் சேதமானது.

இதுகுறித்து இளமின் பொறியாளர் ஸ்ரீதரன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில், ஈரோடு மாவட்டம், பருவாச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் நாச்சிமுத்துவை கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture