குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள்

குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள்
X

குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில்,  பராமரிப்பு பணிகள் செய்த மின்வாரிய ஊழியர்கள்.

குமாரபாளையம் மின் வாரிய அலுவலகத்தில், மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகள் செய்தனர்.

மாதம்தோறும் குமாரபாளையம் பகுதியில், அமாவாசை நாளில் அனைத்து விசைத்தறி பட்டறைகளும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த நாளை பயன்படுத்தி, மின் வாரிய அலுவலகத்தில் உள்ள மின் கடத்தி இயந்திரங்கள், கேபிள்கள், நகரில் உள்ள அனைத்து மின் மாற்றிகள், மின் கம்பத்தில் உள்ள மின் இணைப்புகள் உள்ளிட்ட பலவற்றை, மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து அதை சரி செய்வது வழக்கம்.

அவ்வகையில், அமாவாசை நாளான இன்று, விசைத்தறி பட்டறைகள் இயங்காத நிலையில், குமாரபாளையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. சேலம் சாலையில் பவர் ஹவுஸ் வளாகம் மற்றும் நகரில் அனைத்து மின் மாற்றிகள் உள்ளிட்டவைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேட்டூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வந்த குழுவினர், அனைத்து மின் சாதனங்களையும் பராமரிப்பு பணி செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!