சங்ககிரி கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சங்ககிரி கோட்டத்தில் நாளை  மின் நுகர்வோர்கள்   குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 14 ல் நடைபெறவுள்ளது

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 14- (புதன்கிழமை) நடைபெறவுள்ளது

இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 14-(புதன்கிழமை) காலை 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகம்,சங்ககிரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்நுகர்வோர் பற்றிய சிறுகுறிப்பு:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு 20 (2 ல் நுகர்வோர் என்பவர் யார் எனத் தெளிவாக விளக்குகிறது. அதன்படி நுகர்வோர் எனப்படும் நபர், எந்த ஒரு பொருளையும், பணத்திற்காகவோ, பணம் கொடுப்பதாக உறுதியளித்தோ அல்லது தவணை முறையில் பணம் செலுத்தியோ வாங்கி உபயோகித்துப் பயன்பெறுபவராவார். இத்தகைய நபரின் ஒப்புதலின் பேரில் மற்ற வேறு யாரேனும், அவர் வாங்கிய பொருளை உபயோகித்து பயன் பெறுபவரானாலும் அந்த மற்ற நபரும் நுகர்வோரே எனக் கருதப்படுவர். ஆனால் இவ்வாறு வாங்கிய பொருளை மறு விற்பனை அல்லது வர்த்தக. நோக்கத்துடன் வாங்கினால், அத்தகைய நபர் நுகர்வோர் ஆக மாட்டார்.மேற்கூறியவை யாவும் வாங்கப்படும் வேறு பல சேவைகளுக்கும் பொருந்தும்.

மின்சாரச் சட்டம் 2003ன் படியும் மின் நுகர்வோர் பற்றி விளக்கப்பட்டுள்ளது (பிரிவு 2(15)ல்). இதன்படி மின் நுகர்வோர் என்பவர் மின்சார விநியோக உரிமம் பெற்றவர் மூலமாக அல்லது அந்த சமயத்தில் அமலில் இருந்த எந்த பிற சட்டப்படியான உரிமம் பெற்ற வேறு எந்த நபரோ சொந்த உபயோகத்திற்காக மின்சாரம் பெறுபவராவார்; மற்றும் எந்த ஒரு நபரின் வீடு, மின்சார அமைப்பு முலமாக உரிமம் பெற்றவர் இணைக்கப்பட்டுள்ளதோ அவ்வீட்டில் உள்ளவர் நுகர்வோர் எனப்படுவார்.

மின்சாரப் பணி என்பது குறிப்பாக மற்றும் பொதுத் தன்மையான இச்சொல்லுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நுகர்வோர்க்கு மின்சாரம் வழங்குதல், மின் அளவு பட்டியலிடல், மின் சக்தி மற்றும் விநியோக அமைப்பினைப் பராமரித்தல் மற்றும் அது தொடர்பான எல்லாவிதமான உட்பணிகளைக் கவனித்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும்

மேற்கூறிய இரு விதமான விளக்கங்களும். மேல்வாரியாக ஒன்றாகத் தோன்றினாலும். சற்றே மாறுபட்டவை. முதல் விளக்கம் பொதுவாக பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்தி நன்மையடைவோர் பற்றியது. இரண்டாவது விளக்கம். குறிப்பாக மின்சாரப் பணிகளையும் அதனால் பயன் பெறுவோரையும் பற்றியது. மின்சாரத்தை ஒரு விற்பனைப் பொருளாகவும். மின்சாரப் பணிகளை, சேவைகளாகவும் கருதலாம். இந்த அர்த்தத்தில், மின்சாரப் பணிகளை அனுபவித்துப் பலனடைந்த பின்தான். அதற்குரிய விலையைத் தருவதால் மின் நுகர்வோரையும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் கொண்டு வரலாம். இத்தகைய பரிமாற்றங்கள் எவ்வாறு மின்சார உரிமதாரர் மேற்கொள்ளலாம் என மின்சாரச் சட்டம் 2003. தெளிவாக வரையறை செய்துள்ளது.


Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை