மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைப்பு..!

மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைப்பு..!
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் உள்ள மின் கம்பம் பல ஆண்டுகளாக சேதமடைந்து, எந்நேரமும் சாய்ந்து விடும் நிலையில் இருந்தது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், மின்வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் மனு கொடுத்தனர். மின்வாரிய அதிகாரிகள் ஆகிக்கொண்டே இருந்தனரே தவிர, கம்பம் மாற்றப்படவில்லை. இந்த கம்பம் நேற்று நடந்த மின்வாரிய மின் பராமரிப்பு பணிகளில் ஒன்றாக, கம்பத்தை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதனால் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சித்ரா, விமலா, மல்லிகா உள்பட பலர், மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும், கத்தேரி பிரிவு புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், கத்தேரி பிரிவு பகுதியிலிருந்து குமாரபாளையத்துக்குள் வரும் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையின் ஓரத்தில் நட வேண்டும், சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் கடைகள் சேதமானதால் அதனை புதுப்பிக்க வேண்டும், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும், காவிரி கரையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் குமாரபாளையம் எல்லை முழுதும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் மின் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்த வேண்டும். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றவும், போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் மற்றும் போக்குவரத்து சீர் படுத்தவும், போக்குவரத்து போலீசார் அதிகப்படுத்த வேண்டும், ஆனங்கூர் பிரிவு சாலையில் மாணவ, மாணவியர் அச்சமில்லாமல் செல்ல நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்தி சுகாதார பணிகள் தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவினை மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, பன்னீர்செல்வம் உள்பட பலர் வழங்கினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil