நாட்டுப்புறக் கலைகள் மூலம் சுயேச்சை வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

நாட்டுப்புறக் கலைகள் மூலம்    சுயேச்சை வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
X
குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா நாட்டு புற கலைகள் மூலமாக வாக்குறுதிகளை பாடலாக்கி வாக்கு சேகரித்தார். #

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஓம் சரவணாவுக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வீடு,வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார். குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வீடு வீடாக மக்களை சந்தித்து தனது சின்னமான வைரம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்கிறார்.

அவர் தொகுதிக்கு செய்யவேண்டிய வாக்குறுதிகளை விளக்குகிறார். இதற்கிடையே நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையிலும், எளிய முறையில் வாக்காளர்களை கவரும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் பாடல்கள் பாடி வாக்காளர்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

நாட்டுப்புறப் பாடலின் வாயிலாக தொகுதியில் வெற்றி பெற்றால், தொகுதி வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. இதுவரை அவர் செய்த நல்ல காரியங்கள்,செய்த சமூக சேவைகள் நாட்டுப்புற பாடலாக உருவாக்கப்பட்டு பாடப்படுகிறது. இந்த நூதன பிரசாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!