குமாரபாளையத்தில் அதிமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் அதிமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுசெயலராக அங்கீகாரம் செய்தமைக்கு குமாரபாளையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க.வில் பொது செயலர் இடைப்பாடி பழனிசாமியா, பன்னீர்செல்வமா, என்ற நிலை நீடித்து வந்தது. பல கட்ட போராட்டங்கள் இருதரப்பிலும் நடந்து வந்தது. இதில் தேர்தல் ஆணையம் சார்பில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொது செயலர் என அங்கீகாரம் செய்து அறிவிப்பு வெளியானது. இதனை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நிர்வாகிகள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், துணை செயலர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் ரவி, அர்ச்சுணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இதை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu