மருத்துவமனைகள் முன்பாக தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரிக்கை..!

மருத்துவமனைகள் முன்பாக தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரிக்கை..!
X

சித்திரை பிறப்பையொட்டி பழக்கடைகளில் குவிந்த மக்கள்.

மருத்துவமனைகள் முன்பாக தேர்தல் பிரசாரம் செய்வதால் நோயாளிகள் பெரிதும் அவதியுறுகின்றனர்.அதனால் மருத்துவமனை பகுதிகளில் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும்

தமிழ் புத்தாண்டு கொண்டாட பழக்கடைகளில் குவிந்த பொதுமக்கள் தேர்தல் பிரசாரத்தால் மக்கள் பொருட்கள் வாங்கமுடியாமல் அவதியடைந்தனர்.

சித்திரை முதல் நாள் கொண்டாட, வீடுகளில் சுவாமி படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கனி வகைகள் படையலிட்டு பொதுமக்கள் வணங்கி வருவது வழக்கம். இதற்காக பூக்கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.

இடைப்பாடி சாலை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், செல்ல முடியாத நிலையும், தேவூர், இடைப்பாடி செல்லும் பஸ்கள் போக முடியாத நிலையும் ஏற்பட்டது.

மருத்துவமனை முன்பாக தேர்தல் பிரசாரம்

இதன் அருகில் அரசு மருத்துவமனை இருப்பதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. இது தவிர இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் அரசு மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்தி, ஒலிபெருக்கி அளவை அதிகப்படுத்தி பிரசாரம் செய்தனர்.

இதனால் அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை டாக்டர் வசம் சொல்ல முடியாமலும், டாக்டர் சொல்வது நோயாளிக்கு புரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. உள் நோயாளிகளாக இருப்பவர்கள், பிரசவ வழியில் அட்மிட் ஆனவர்கள், குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், பிறந்த குழந்தைகள் உள்பட அனைவரும், ஒலிபெருக்கியின் சத்தத்தால் பெறும் அவதிக்கு ஆளாகினர்.

மருத்துவமனை முன்பாக நோயாளிகளுக்கு தொந்தரவு தரும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்வதை கட்சியினர் தவிர்த்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால், அரசியல்வாதிகள் தங்கள் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள். அரசு மருத்துவமனை பகுதிகளில் மற்றும் இதர தனியார் மருத்துவமனை பகுதிகள் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யக் கட்டுப்பாட்டினை மாவட்ட நிர்வாகம் அவசியம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!