குமாரபாளையம் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

குமாரபாளையம் அருகே பைக் மோதி   மூதாட்டி உயிரிழப்பு: ஓட்டுநர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர்கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் சுந்தரி, (56.) தனியார் கல்லூரியில் உள்ள கேண்டீன் கூலி தொழிலாளி. இவர் வட்டமலை தனியார் கல்லூரியில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல கல்லூரி முன்பு நேற்றுமுன்தினம் இரவு 07 மணிக்கு நின்றிருந்த போது, வேகமாக வந்த பல்சர் பைக் ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து பைக் ஓட்டுநர் காங்கயம் பேக்கரியில் பணியாற்றும் கூலித் தொழிலாளி பழனி, 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!