குமாரபாளையத்தில் முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடமாடும் முகாம்

குமாரபாளையத்தில் முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடமாடும் முகாம்
X

ஸ்டான்லிபாபு, நகராட்சி கமிஷனர், குமாரபாளையம். 

குமாரபாளையத்தில் முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடமாடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறுகையில், தமிழக அரசின் உத்திரவின் பேரிலும், மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல் பேரிலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 100 சதவீத இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், நகராட்சி துப்புரவு, சுகாதார, டெங்கு, பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளா முடியாத வயதானவர்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால், நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனம் மூலம், அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்கள் : சுகாதார அலுவலர் எண்: 99444 42115, துப்புரவு ஆய்வாளர் எண்: 73958 80658. இந்த எங்களில் தொடர்பு கொண்டு உதவி கேட்டால், வயதானவர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story