கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை

கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை
X
பைல் படம்.
குமாரபாளையத்தில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த டிச. 23 இரவு 07:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சாலையை கடந்தார். அப்போது பவானியிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஈகோ கார் முதியவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து சென்ற போது, வழியில் இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிபட்ட முதியவர் பெயர் பழனிசாமி, 70, என்பது மட்டும் தெரிய வந்தது. விலாசம் தெரியவில்லை. கார் ஓட்டுனர் சின்ன கோட்ட பாளையம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பாபு, 41, என்பது தெரிய வந்தது. பாபுவிற்கும் அடிபட்டதால் குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார், வி.ஏ.ஒ. முருகன் புகாரின் படி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!