குமாரபாளையத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் கத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் முருகன், 50. கூலித்தொழிலாளி. இவர் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இரவில் நடந்த இந்த சம்பவத்தை, காலை 6 மணியளவில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிலர் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர்.

விசாரணையில் இறந்தவரின் உடன் பிறந்த சகோதர்களான குப்பன், பண்ணாரி, ஆறுமுகம், ஈஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவருகிறது. உறவினர்கள் யாரும் தற்போது இல்லை என்றும், 10 வருடம் முன் சொந்த வீட்டை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கொண்டு தறி ஓட்டும் வேலை செய்து வந்ததாகவும், வயிற்றில் கட்டி உள்ளதாகவும், இதனை அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கூறி வந்ததாகவும் கிராம நிர்வாக அலுவலர் முருகன் தமது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story