குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மற்றும் மேற்கு காலனி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார்.

கொரோனா காலத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்க குழந்தைகளுக்கு பள்ளி முடிந்த பின் கல்வி கற்பிக்க தமிழக அரசால் கொண்டு வந்துள்ள திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். இத்திட்டத்தின் செயல்பாடுகளை தெம்மாங்கு தென்றல் கலைக்குழுவின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பின்ர்கள், வட்டார வழ மைய மேற்பார்வையாளர் ஜோதி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கனகராஜ், குணசேகரன், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா