குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி  திட்ட மையம் துவக்கம்
X

குமாரபாளையம் கலைமகள் வீதியில், இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்க விழா, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது. கலைமகள் வீதியில் நடந்த துவக்க விழாவுக்கு, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கல்வி பயிற்றுவிக்க உள்ளனர். அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் பயிற்சி ஆசிரியர் ஜமுனா, சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!