குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்

குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்
X

குமாரபாளையம் அருகே திருமண விழா ஒன்றில்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமாரபாளையம் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே தேவூர் கோனேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணாயாள், சங்ககிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலர் காசிராஜன் தம்பதியர். இவர்களின் மகன் தீபக்ராஜன். இவருக்கும், அந்தியூர் ஆப்பக்கூடல் சாந்தி, சீனிவாசன் தம்பதியரின் மகளுமான பாவனா என்பவருக்கும், குமாரபாளையம் அருகே புளியம்பட்டி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் ரத்தினம், ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, மருதாசலம், ஒன்றிய குழு துணை தலைவர் சிவகுமாரன் உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!