குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு  எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி
X

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், நிவாரண உதவிகள் வழங்கவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமாரபாளையம் வந்தார். காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இரு கரைகளை தொட்டவாறு சென்று கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்து கொடுத்து உள்ளார். அரசாங்கம் செய்யவேண்டிய உதவிகளை ஒரு எம்.எல்.ஏ. செய்து கொடுத்து உள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. ஏற்கனவே இருமுறை வெள்ள பாதிப்பு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தேன். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளவும் இல்லை, ஆறுதல் சொல்லவும் இல்லை. தங்கமணி உங்கள் ஆதரவால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். பவானி பகுதியிலும் முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரிசி 10 கிலோ, சர்க்கரை, பருப்பு, ஆயில் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இடைப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், நகர செயலர் பாலசுப்ரமணி, முன்னாள் நகர செயலர் குமணன், நிர்வாகிகள் பழனிசாமி, ரவி, அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..