பள்ளிபாளையத்தில் டிச. 23ல் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்

பள்ளிபாளையத்தில் டிச. 23ல் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்
X
பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிச. 23ல் மின் இணைப்பு பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

இதுதொடர்பாக, பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாநிலம் முழுதும் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாய மின் இணைப்புகளை துரிதப்படுத்த மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் பெயர் மாற்றம், சர்வே எண் உள்பிரிவு, மற்றும் சர்வே எண் மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் செயற்பொறியாளர், பள்ளிபாளையம் அலுவலகத்தில் டிச. 23, காலை 10:00 மணி முதல், மாலை 03:00 வரை நடைபெறவுள்ளது. பெயர் மாற்றம் செய்ய, இறப்பின்படி வகைக்கு, விவசாய விண்ணப்ப படிவம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதார்களின் ஆட்சேபனையில்லா கடிதம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆகியனவும், விற்பனை படி வகைக்கு, விவசாய விண்ணப்ப படிவம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதார்களின் ஆட்சேபனையில்லா கடிதம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, மற்றும் விற்பனை பத்திரம் ஆகியன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சர்வே எண் உள்பிரிவு மாற்றத்திற்கு, விவசாய விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அலுவலர் கடிதம், வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். சர்வே எண், கிணறு மாற்றம் வகைக்கு விவசாய விண்ணப்ப படிவம், பழைய, புதிய கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வித மாற்றமும் தேவைப்படாத முழுமையான ஆவணங்களும் பெற்றுக் கொள்ளப்படும். இறப்பின்படி வகை, விற்பனைபடி வகை, சர்வே எண் உள்பிரிவு மாற்றம் வகைகளுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும். சர்வே எண், கிணறு மாற்றம் வகைக்கு 7 நாட்களில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!