மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார், மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார், மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
குமாரபாளையம் மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார் செய்யபட்டதுடன், மின் வாரிய ஊழியர்கள் மின் வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம் சேலம் சாலை, மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பனியாயற்றி வருபவர் வினோத்குமார், 27. இவரை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், 38, என்பவர், மின்வாரிய அலுவலகம் வந்து, அவரது இடத்தில் மின் கம்பம் அகற்றுவது சம்பந்தமாக, மின் வாரிய பொறியாளர் வினோத்குமாரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மின்வாரிய பணியாளர்களை மிரட்டி வருவதாகவும் தெரிகிறது. இது குறித்து பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மின்வாரிய அலுவலர்கள் சார்பில், குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரிய உதவி இயக்குனர் முருகானந்தம் கூறியதாவது;
குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் மின்மாற்றி அமைக்க அரசு சார்பில் அனுமதி கிடைத்து சுமார் 2 மாதங்களுக்கும் மேல் ஆனது. அந்த பகுதியில் எந்த இடத்தில் கம்பம் வைத்தாலும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்மாற்றி அமைக்க மின் கம்பம், அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலி இடத்தின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர், மின்வாரிய அலுவலகம் நேரில் வந்து, மின் வாரிய உதய் பொறியாளர் வினோத்குமாரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும் அடிக்கடி மின் வாரிய அலுவலகம் வந்து, பணியாற்றி வரும் பணியாளர்களை வீடியோ, போட்டோ எடுத்து, சங்கடப்பட வைக்கிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி கனகராஜ் கூறியதாவது:
அதிகாரிகளை மட்டுமில்லாது, மின் ஊழியர்களை கூட பிரகாஷ் திட்டி வருகிறார். அவர் எங்களுக்கு மிகுந்த மான உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். போதிய ஆட்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், நேரம் காலம் பார்க்காமல் அயராது பாடுபட்டு, மின் விநியோகம் செய்து வருகிறோம். தொடர்ந்து இதே போல் நடந்து கொண்டால், மின்வாரிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பிரகாஷ்க்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரகாஷ் கூறியதாவது:
மின்வாரியத்தினர் மின் கம்பம் வைக்கும் இடம், எனது இடத்திற்கு முன்பாக உள்ளது. நான் இந்த இடத்தில் வைக்க கூடாது என்று பலமுறை சொல்லியும், அதனை பொருட்படுத்தாமல், கம்பம் வைப்பதில் குறியாக உள்ளனர். இது சம்பந்தமாக் பேச வந்த போது, அதிகாரி வினோத்குமாரை கடுமையான வார்த்தைகளால் பேச வேண்டிய நிலை வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பினரை அழைத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு, இனி மின்வாரிய அலுவலகம் சென்று, யாரையும் சங்கடப்படும்படி பேச மாட்டேன், எனது சொந்த வேலைகளுக்கு மட்டும் தான் மின்வாரியம் அலுவலகம் செல்வேன் எனவும் பிரகாஷ் லெட்டர் எழுதி கொடுத்துள்ளார், என இன்ஸ்பெக்டர் தவமணி கூறினார்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ் மீது பபுகார் கொடுக்க வந்த போது, மின் ஊழியர்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார் செய்யபட்டதுடன், மின் வாரிய ஊழியர்கள் மின் வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu