சார்ஜ் போடப்பட்ட இ பைக் எரிந்து வீடு முழுவதும் பரவிய தீ

சார்ஜ் போடப்பட்ட இ பைக் எரிந்து வீடு
முழுவதும் பரவிய தீ
பள்ளிபாளையம் அருகில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் கரும்புகையுடன் பற்றி எரிந்த இ பைக் ... முழுதாகக் கருகிய நிலையில் வீட்டிலிருந்த முதியவர்கள் நல்வாய்ப்பாக காயம் இன்றி தப்பினர்.....
பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்கினோவா என்ற ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரான இ-பைக்கை வாங்கி இதுவரை பராமரித்து ஓட்டி வந்துள்ளார். நேற்று இரவு அவரது தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் தாய் ஜெயம்மாள் ஆகியோர் இரவு வாகனத்திற்கு சார்ஜ் போட்டு விட்டு வீட்டில் 10 மணி அளவில் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் மின் கசிவு காரணமாக தீ பற்றி உள்ளது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டிலிருந்த முதியவர்களை வெளியேற்றி வாகனத்தில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் அரை மணி நேரத்திற்குள்ளாக தீ பரவி எறிய துவங்கி வீடு முழுவதும் மற்றும் வாகனம் முழுவதும் எரிந்து சேதம் ஆகி விட்டது ...
இது தொடர்பாக வாகன உரிமையாளர் செந்தில் கூறியதாவது... கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகிநோவா இ வாகனத்தை தான் வாங்கி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை முறையான சர்வீஸ் செய்து வாகனத்தை ஓட்டி வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருச்செங்கோட்டில் இருந்த டீலர் கடையை மூடி விட்டதால் சர்வீஸ் செய்ய ஒவ்வொரு முறையும் நாமக்கல் சென்று பல சிரமங்களுக்கு இடையில் முறையாக சர்வீஸ் செய்து வந்ததாகவும், இருப்பினும் நேற்று இரவு சார்ஜ் போட்டு இருந்தபோது இந்த தீ விபத்து நடந்து இருப்பதால் வாகன விற்பனையாளர்கள் இந்த சம்பவத்தால் வாகனம் முழுதாக எரிந்தது மட்டுமில்லாமல் தனது வீடும் சேதம் அடைந்துள்ளதால் வாகன விற்பனை நிறுவனத்தார் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் கூறும் போது...
நாங்கள் இரவு வாகனம் தீப்பிடித்தது அறிந்து விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றோம் ஆனால் அது ஆசிட் பேட்டரி வகையைச் சேர்ந்திருப்பதால் கரும்புகையுடன் சூழ்ந்து அந்த வீடு கரும்புகை மயமானது. அரை மணி நேர அளவிற்குள் வாகனம் முழுவதுமாகவே எரிந்து சேதமாகி, வீடு, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிவிட்டன....
பல்வேறு இடங்களில் ஈ வாகனங்கள் தீப்பிடிப்பதை பார்த்திருக்கிறோம். அதனால் இ வாகனம் வைத்திருப்போர் வீட்டிற்குள் நிறுத்தி சார்ஜ் செய்யாமல் வீட்டிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து வாகனத்திற்கு சார்ஜ் செய்வது நல்லது என தெரிவித்தார்.
சமீப காலங்களில் அதிக அளவில் இ வாகனங்கள் தீப்பிடித்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே அரசு இ வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து தரச் சான்றுகள் வழங்குவதில் மேலும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu