சாய ஆலைகள் கழிவு நீர் வெளியேற்றம்: லாரியை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்

சாய ஆலைகள் கழிவு நீர் வெளியேற்றம்: லாரியை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே சாயசலவை ஆலைகள் கழிவு நீர் வெளியேற்றுவதை கண்டித்து, லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பள்ளிபாளையம் அருகே சாயசலவை ஆலைகள் சுத்திகரிப்பின்றி கழிவு நீர் வெளியேற்றுவதை கண்டித்து, லாரியை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் சமயங்கிலி பகுதியில் 10க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் கழிவு சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை ஓடையின் மூலம் நேரடியாக வெளியேற்றம் செய்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாயசலவை ஆலைக்குச் சென்ற தண்ணீர் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது தொடர்ந்து சாய சலவை ஆலைகள் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் கழிவு நீரால் குடிநீர் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் செல்லும் தண்ணீர் லாரியால் சாலைகள் சேதமடைவதுடன் சாலையில் குறுகலாக இருப்பதால் விபத்து நிகழக்கூடும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாத சாயசலவை ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தண்ணீர் லாரி செல்லுவதை மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கு முன்னதாக கிராம மக்களை மிரட்டும் பாணியில் பேசிய போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் லாரி சிறைபிடிப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!