கோவில் மண்டலாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

கோவில் மண்டலாபிஷேக விழாவில்   முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பெருமாள் கோயில் மண்டலாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே பெருமாள் கோயில் மண்டலாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன் மண்டலாபிஷேக பூஜைகள் தற்போது தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

இந்த விழா குறித்து பெருமாள் பக்தர்கள் கூறியதாவது:-

திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.

தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!